பிப்ரவரி 14, 2015

சுவையான முருக்கு

தேவையானவை :


          • புழுங்கல் அரிசி - 2 டம்ளர்
          •  
          • பொட்டுக்கடலை - 1 டம்ளர்
          •  
          • நெய் - 50 மில்லி
          •  
          • எள்ளு - தேவையான அளவு
          •  
          • ஓமம் -  தேவையான அளவு
          •  
          • உப்பு - தேவையான அளவு 
          •  
          •  மிளகாய் தூள் - தேவையான அளவு
          •  
          •  ரீபைண்டு ஆயில் - பொறிக்க தேவையான அளவு  
செய்முறை :

  •  புழுங்கல் அரிசியை குறைந்தது 3 மணி நேரம் நன்றாக ஊற வைத்து பின் களைந்து கிரைண்டரில் தேவையான அளவு தண்ணீர் விட்டு விட்டு நைஸாக ஆட்டி எடுக்கவும். ( இட்லிக்கு ஆட்டுவது போல )

  • பொட்டுக்கடலையை மிக்‌ஷி ஜாரில் போட்டு  தண்ணீர் விடாமல் நைஸாக பொடித்து எடுக்கவும்.

  • ஒரு பெரிய பாத்திரத்தில் அரிசி மாவு, பொட்டு கடலை மாவு, நெய், எள்ளு, ஓமம், உப்பு, மிளகாய் தூள் ஆகிய அனைத்தும் சேர்த்து தண்ணீர் விடாமல் பிசையவும். பிசையும் பதமானது சப்பாத்தி மாவின் பததிற்கு வர வேண்டும்.

  • ஒரு சிறிய தட்டத்தின் பின் பகுதியில் சிறிது ரீபைண்டு ஆயிலை நன்றாக தடவி அதன் மீது முருக்கு அச்சில் இடப்பட்ட மாவை வட்டமாக பிழியவும்.

  • அதனை நேரடியாகவோ அல்லது பொறிக்கும் கரண்டியின் பின்பகுதியில் போட்டு பின் நன்றாக காய்ந்த எண்ணையில் போட்டு பொறித்து எடுக்கவும்.



  குறிப்பு : 
  • அரிசி மற்றும் பொட்டுக்கடலையின் அளவு மேலே குறிப்பிட்டது போல் 2:1 என்ற அளவில் இருக்க வேண்டும். அளவு மாறினால் முருக்கின் கடினத்தன்மை மாறும்.

  •  அரிசியை இட்லிக்கு ஆட்டுவது போல தண்ணீர் விட்டு ஆட்டுவதால்
    மேற்க்கொண்டு மற்ற பொருட்களை போட்டு பிசையும் போது தண்ணீர் சேர்க்க தேவையில்லை.


     
  • புதிதாக முயற்சி செய்பவர்கள் மாவை பிசையும் போது ருசிக்கு ஏற்ப எள்ளு, ஓமம், உப்பு, மிளகாய் தூள் ஆகியவற்றை சிறிது சிறிதாக சேர்க்கவும். 

  • அதே போல்  புதிதாக முயற்சி செய்பவர்கள் எண்ணையில் பொறித்து எடுக்கும் போது பொன்னிறமாக பொறிக்காமல் தோறாயமாக 100 ல் இறுந்து 120 நொடிகளுக்குள் முருக்கை எண்ணையிலிருந்து வெளியே எடுக்கவும். பொன்னிறமாக எடுத்தால் ருசியானது தீய்ந்தது போல இருக்கும்.

  • தட்டத்தின் மீது எண்ணை தடவி அதன் மீது முருக்கு பிழிவதால் எண்ணையில் போடும் போது ஒட்டாமல் விழும்.